Recent Post

Thursday, November 15, 2012

ஐபிஎம் கணினியை இரண்டாம் நிலைக்கு தள்ளியது US Crey XK7 சூப்பர் கணினி.


இதுவரை உலகின் அதிவேக கணினி என்ற பெயரை தக்கவைத்திருந்த ஐபிஎம் நிறுவனத்தின் சூப்பர் கணினியை இரண்டம் நிலைக்கு தள்ளியது அமெரிக்க அரசின் ஓக் ரிட்ஸ் நிறுவனத்தின் க்ரே XK7 என்ற சூப்பர் கணினி.

ஐக்கிய அமெரிக்க மற்றும் ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தரவரிசையில் உலகின் அதிவேக கணினி என்ற நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்க எரிசக்தி துறையிடமிருந்து நிதியை பெரும் டைடன்(TITAN ) ஆராய்ச்சி நிறுவனம்  ஆற்றல் ஆராய்ச்சி(Energy ), காலநிலை மாற்றம்(Climate  Change ), திறமையான இயந்திரங்கள்(Efficient Engines ), மூலப்பொருட்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு பயன்படுத்துகிறது.

கலிபோர்னியாவின் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் நடந்த ஆய்வில்தான் ஐபிஎம் - ன் சூப்பர் கம்பியூட்டரை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது அமெரிக்காவின் கிரே XK7 சூப்பர் கணினி.

இதில் ஐபிஎம்-ன் சூப்பர் கணினியின் வேகம் 16 32 பீட்டாபிலோப்ஸ் என்றும் க்ரே XK7 -ன் வேகம் 17.59 பீட்டாபிலோப்ஸ் என்றும் நிருபிக்கப்பட்டுள்ளது.